கவிதைகள்
குழந்தை
பார்த்து பார்த்து கட்டிக் கொண்டிருக்கும்
குழந்தைகளுக்கு தெரியாது-வீட்டின்
ஆயுட்காலம் ஒருசில வினாடிகள் தான் என்று!
‘கடற்கரை வீடு’
மலர்
மலரை நேசிக்கும் பெண்ணே
உன்னை நேசிக்கும் மனதை
நேசிக்கத் தெரியாதா!
இயற்கையில் மலரும் பூக்களுக்கு
பல பெயர்கள்!-என்
இதயத்தில் மலரும் பூக்களுக்கு
ஒரே (உன்)பெயர் தான்!
மறதி
சிந்தித்தேன்-அவளை
சந்திக்க வேண்டாமென்று
சந்தித்தேன்
சிந்தித்ததையும் மறந்து!