கவிதைகள்
பொக்கிஷம்
உன் பார்வை பட்ட
முள்ளொன்று மலர் ஆனது!
உன் பாதம் பட்ட
பதரொன்று பவளம் ஆனது!
உன் இதழ் பட்டு வந்த
வார்த்தை மட்டும் பொக்கிஷமாக
என் இதயத்தில் அல்ல கல்லறையில்..!
காதல் நோய்
பெண்ணே!
உந்தன் விழிகளிலிருந்து
வந்த கதிர்வீச்சு -எந்தன்
இதயத்தை தாக்கவே-நிரந்தர
நோயாளியாக உலாவுகிறேன்
இவ்பூலோகத்தில்-எந்தன்
நோய்க்கு மருந்து நீயாக இருப்பதால…!
போதை
சகியே!
எழுத்தும் ஒரு வகையில்
போதைதான்
உன்னை பற்றி எழுதும் போது
என்னை பற்றி மறக்கிறேன்..!