கவிதைகள்
காதலி
நான் ‘சிற்பியும்’ அல்ல
என்னிடம் ‘கற்களும்’ இல்லை
என் ‘இதயத்தில்’ எப்படி வந்தது
இந்த அழகான ‘சிற்பம்’…???
எதிரி
அன்பே! இவ்வுலகில் – எனக்கு
எதிரி என்று யாரும் இல்லை
என் இமைகளை தவிர
உன்னை காணும்போது
என் விழிகளுக்கு
தடையாக இருப்பதால்!
சேய்
திடீரென்று காய்ச்சல் எனக்கு
உடனே கடிதம் எழுதினேன்-உனக்கு
‘மழையில் நனையாதடா செல்லம்’
-தாய்-